Aran Sei

’மக்கள் விரோத’ மின்சார மசோதா தாக்கல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

நாடாளுமன்ற மின்சார (திருத்த) மசோதா 2020 தாக்கல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடிதம் எழுதியுள்ள்ளார்.

”இந்த விஷயத்தில் பரந்த அளவிலான வெளிப்படையான மற்றும் வெளிப்படையான விவாதம் விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

”மிகவும் விமர்சிக்கப்பட்ட மின்சார (திருத்த) மசோதா 2020ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு எடுக்கும் புதிய நடவடிக்கைக்கு எதிராக எனது எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்ய இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தில் இருக்கும் மக்கள் விரோத அம்சங்களை எதிர்கட்சியினர் பலர் அடிக்கோடிட்டுக் காட்டினர். மேலும், ஜூன் 12, 2020 ஆம் தேதி, நான் உங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் மசோதாவின் அனைத்து ஆபத்துகள் குறித்தும் விவரித்திருந்தேன்.” என மம்தா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மின்சார (திருத்த) மசோதா 2020, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சி என மம்தா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மசோதா முழு மாநில மின்சார கட்டமைப்பையும் தேசிய கட்டமைப்பின் ஒரு இணைப்பாளராக மாற்று நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

”எங்கள் கோரிக்கைகள்குறித்த எந்த பரிசீலனையும் இல்லாமல், இந்த மசோதா மீண்டும் கொண்டு வருவதை அறிந்து திகைப்படைகிறேன். உண்மையில், இந்த முறை மேலும் சில கடுமையான மக்கள் விரோத அம்சங்களை கொண்டுள்ளது” என மம்தா பானர்ஜி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source : Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்