முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகளையாவது வழங்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 20), மம்தா எழுதிய கடிதத்தில்,“வங்கிஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்கள் உட்பட தொற்று பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க, ஒன்றிய அரசின் தடுப்பு மருந்து கொள்கையில் இடமில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில், முன்களப்பணியார்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து செலுத்த எங்களுக்குக் குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தேவை. இதைத் தாமதமின்றி கிடைக்க செய்யுங்கள்.” என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.