தேர்தல் பரப்புரையின் போது, மேற்கு வங்க விவசாயிகளுக்கு வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த ரூ .18,000 நிலுவைத் தொகை இன்னும் விவசாயிகளுக்கோ மாநில அரசிற்கோ வந்து சேரவில்லை என்பதை நினைவூட்ட பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “அண்மையில், நீங்கள் மேற்கு வங்கத்திற்கு வருகை தந்தபோது, ஒவ்வொரு விவசாயிக்கும் நிலுவையில் உள்ள தொகையில் ரூ.18,000-ஐ வழங்குவேன் என்று பலமுறை உத்தரவாதம் அளித்தீர்கள். ஆனால் இன்றுவரை, மேற்கு வங்க அரசோ அல்லது விவசாயிகளாலோ எந்த நிதியையும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தகுதியான விவசாயிகளுக்கு உரிய நிதியை வழங்கவும், 21.79 லட்சம் விவசாயிகளின் தரவுகளை (டேட்டா பேஸ்) வெளியிடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தயவுசெய்து அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில், 75 லட்சம் மேற்கு வங்க விவசாயிகளுக்கு ரூ.18,000 வழங்குவதாக உறுதியளித்தது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தத் தொகையை ஒரே தவணையாக வழங்குவதாக தெரிவித்திருந்தது.
Source : New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.