Aran Sei

‘கொரோனா பாதித்த மத்திய படையினரை திரும்ப பெறுக’ – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி

credits : the hindu

தேர்தல் பணியில் உள்ள கொரோனா தொற்று பாதித்த மத்திய பாதுகாப்பு படையினரை, தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும் என்ற மத்திய பாதுகாப்பு படையின் உத்தரவை வரவேற்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

”தேர்தல் ஆணையம் தனது பொறுப்பில் இருந்து விலகி ஓட முடியாது என தெளிவாக கூறியிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் தேர்தல் ஆணையமும், நரேந்திர மோடியும் தான்” என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

“கொரோனா பாதித்த மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் அதிகமாக மத்திய பாதுக்காப்பு படையினர் தங்கியுள்ளனர். அவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தயவுசெய்து கடைசி கட்ட தேர்தலில் அவர்களை திரும்ப பெறுங்கள்” என மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – கொலைகுற்றமும் சுமத்தலாம் என்று நீதிமன்றம் கருத்து

முன்னதாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முறையாக பின்பற்றவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்