வங்கத்தில் கலவரத்தைத் தூண்ட பாஜக முயல்கிறது என்றும் அவர்களின் வலையில் சிக்காது, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று (ஏப்ரல் 20), சிறுபான்மையினர் அதிகமுள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
அப்போது, “கொரோனா தொற்றுநோயை பரவலை கருத்தில் கொண்டு கடைசி மூன்று கட்ட வாக்குபதிவை ஒரே கட்டமாக ஒரே நாளில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரினோம். ஆனால், எங்கள் கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. கடைசி மூன்று கட்ட வாக்குபதிவுகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் உதவுவதற்காகவே இப்படி செய்தார்கள். அப்போதுதான், அவர் நிறைய பேரணிகளில் பங்கேற்று உரையாற்ற முடியும்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“பாஜக வகுப்புவாத பிரிவினையை தூண்ட முயற்சிப்பதால் கவனமாக இருங்கள். வங்கத்தில் கலவரத்தைத் தூண்ட பாஜக முயல்கிறது. அவர்களின் வலையில் சிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். கண்டிப்பாக வாக்களியுங்கள்.” என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
Source : New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.