Aran Sei

தீவிரமடையும் கொரோனாவால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரிய மம்தா : ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்

தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலில் இனி நடக்கவுள்ள அடுத்தகட்ட வாக்குபதிவுகளை ஒரேகட்டமாக ஒரேநாளில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 15) இரவில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்தார்.

அதில், “மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு நாங்கள் முன்னமே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். தற்போது, கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்து நடக்கவுள்ள வாக்குபதிவுகளை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் தங்கிய தேர்தல் அதிகாரி – இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம்

இம்முடிவு கொரோனா மேலும் தீவிரமடைவதில் இருந்து மக்களை காக்கும் என்று மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மீதமுள்ள வாக்குபதிவுகளை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source : New Indian express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்