Aran Sei

‘மோடிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 2024 நாடாளுமன்ற தேர்தலில், நாட்டை மாநில கட்சிகள் வழிநடத்தும்’ – மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவுக்கும் மோடிக்கும் இடையான தேர்தல் என்றும்  மாநில கட்சிகள் நாட்டை வழிநடத்தும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இச்சுற்றுப்பயணம் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியுள்ளார். அப்போது, “2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகள் ஒன்றியணைய வேண்டும். மாநில கட்சிகள்தான் நாட்டை வழிநடத்தும். இத்தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்தியாவிற்கும் இடையேயானது.” என்று கூறியுள்ளார்.

‘மம்தாதான் இந்தியாவின் ஒரே தலைவர்’ – திரிணாமூலுக்கு திரும்பிய பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் புகழாரம்

“நான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை ஏற்க விரும்பவில்லை. நான் இக்கூட்டணியில் ஒரு தொழிலாளியாக தொடர விரும்புகிறேன். நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். எனக்கு ஜெகன் (மோகன் ரெட்டி), நவீன் பாபு (நவீன் பட்நாயக்) (ஒடிசா முதலமைச்சர்), சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முதலமைச்சர்) ஆகியோருடன் நல்ல உறவுகள் உள்ளன.” என்று மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “லாலு பிரசாத் யாதவையும் சந்தித்து பேசியுள்ளேன். இது ஒரு அரசியல் புயலாக உருப்பெற்றால், அதை நீங்கள் தடுக்க முடியாது. மாநில கட்சிகள் நாட்டை வழிநடத்தும். நாங்கள் இனி யாருக்கும் முன்பும் தலைவணங்க மாட்டோம். எங்களுக்கான நேரம் வந்துவிட்டது.” என்று கூறியுள்ளார்.

Source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்