Aran Sei

வங்க விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவேன் – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசிகள் பலர் கொல்லப்பட்டதை நினைவூட்டிய மம்தா பானர்ஜி, வங்க விரோத சக்திகளுக்கு எதிராக ஷாஹீத்தின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றவே நந்திகிராமில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நந்திகிராம் கிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தியதற்கு எதிரான அக்கிராமவாசிகள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பல கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 14), திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நாளில், 2007 ஆம் ஆண்டு, நந்திகிராமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி கிராமவாசிகள் பலர் கொல்லப்பட்டனர். பலரின் சடலங்கள் கிடைக்கப் பெறவில்லை. இம்மாநில வரலாற்றில் இது ஒரு இருண்ட அத்தியாயம். உயிரிழந்த அனைவருக்கும் என் இதயப்பூர்வ அஞ்சலிகள்.” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “நந்திகிராமில் உயிரிழந்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 ஆம் தேதி கிருஷக் திபாஸாக அனுசரித்து வருகிறோம். கிருஷக் ரத்னா என்ற பெயரில் விருதுகளை வழங்குகிறோம். விவசாயிகளே நம்முடைய பெருமை. எங்கள் அரசானது அவர்களின் அனைத்து வளர்ச்சிக்கும் உழைக்கிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும், “நந்திகிராமில் உள்ள என்னுடைய சகோதர சகோதரிகள் என்மீதான மதிப்புக்கும் ஊக்கப்படுத்தலுக்கு அடையாளமாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க தொகுதியில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறேன். வங்க விரோத சக்திகளுக்கு எதிராக ஷாஹீத் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மரியாதை ஆகும்.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்