Aran Sei

‘பாஜகவை வங்கத்தில் இருந்து துரத்த என் ஒரு கால் போதும்’ – சக்கர நாற்காலியில் பரப்புரை செய்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்திலிருந்து பாஜகவை துரத்த என் ஒரு கால் போதும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா பானர்ஜி மீது நந்திகிராமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அதில், “விபத்திற்கு பிறகு நீங்கள் வேதனையுடன் இருந்தீர்கள். உங்கள் வன்முறை அரசியலால் எங்கள் கட்சியைச் சேர்ந்த 130 பேர் கொல்லப்பட்டபோது, உங்களுக்கு ஏதாவது வலித்ததா? அந்த தியாகிகளுடைய தாய்மார்களின் வலியை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று கேள்வி எழுப்பியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி காயமடைந்து மருத்துவமனையில் – சதித்திட்டம் என்று குற்றச்சாட்டு

மேலும் அச்செய்தியில், “என்னுடைய ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நான் தாமதமாக இங்கு வந்திருக்கிறேன். இதை சதி என்று நான் எங்கும் குறிப்பிட விரும்பவில்லை. நந்திகிராமில் நடந்தது தாக்குதல் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது ஒரு விபத்து என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், புருலியாவில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி உரையாற்றியுள்ளார்.

அப்போது,  “நான் காயமடைந்துள்ளதால், நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்று பலர் நினைத்தார்கள். நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டவள். பல காயங்களை அடைந்துள்ளேன். ஆனால், இவை எதுவும் நான் மக்களைச் சென்றடைவதில் இருந்து தடுக்க முடியாது. நான் இந்த சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, இம்மாநிலம் முழுவதும் பயணம் செய்வேன். இந்தத் தாக்குதல்களால் நான் வீழ்ந்து விடமாட்டேன். மேற்கு வங்கத்திலிருந்து பாஜகவை துரத்த என் ஒரு கால் போதும்.” என்று அவர் கூறியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும், “அரசிற்கு எதிராக குரல் எழுப்பும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மௌனிக்கப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன. ஆனால், நாம் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். திறமையற்ற இந்த பிரதமர் நாட்டை எதேச்சதிகார போக்கில் நடத்துகிறார்.” என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்