Aran Sei

பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால் வாங்கும் வாய்ப்பை நிராகரித்தோம் – மம்தா பானர்ஜி

ரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை வாங்கும் வாய்ப்பை மேற்கு வங்க அரசு நிராகரித்தது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பெகாசிஸ் மென்பொருளை வாங்கும் வாய்ப்பு மேற்கு வங்க அரசுக்கு இருந்தது என சட்டப்பேரவையில் மார்ச் 16 தேதி கூறியிருந்த நிலையில், நேற்று (மார்ச் 17) இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க தலைமை செயலகமானநபன்னாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “ ஏறத்தாழ  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெகாசிஸ் மென்பொருளை ரூ. 25 கோடிக்கு மேற்கு வங்க அரசிற்கு விற்பனை செய்ய அதை உரிமையாளரான இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ். தயாராக இருந்துஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க காவல்துறையை அணுகிய என்.எஸ். நிறுவனம், அவர்களின் பெகாசிஸ் உளவு மென்பொருளை ரூ. 25 கோடிக்கு விற்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அரசியல் ரீதியாக, நீதிபதிகள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதால் நான் அதை நிராகரித்தேன், இது ஏற்கத்தக்கது அல்லஎன்று பானர்ஜி கூறினார்.

பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், தொழிலதிபர்களை வேவு பார்க்க  இஸ்ரேல் நாட்டின் என்.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசிஸ் மென்பொருளை மோடி அரசு பயன்படுத்தியாக தொடர்ந்து குற்றசாட்டி வந்த மம்தா பானர்ஜி, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக இதனை பயன்படுத்தக் கூடாதுஎன மம்தா கூறியுள்ளார்.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்