Aran Sei

‘இஸ்லாமிய பயங்கரவாதியான மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் தஞ்சம் புக வேண்டிவரும்’ – பாஜக

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ என்றும் அம்மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடையும் போது, அவர் வங்கதேசத்தில் தஞ்சம் புகுற வேண்டிவரும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கூறியுள்ளார்.

நேற்று (ஜனவரி 17) உத்தரப்பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரான ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, குறிப்பிட்ட சில செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, மம்தா பானர்ஜி ’பாரதியாதாவை’ (இந்தியத்தை) நம்பவில்லை என்றும், இந்து கடவுள்களையும்  அவர் அவமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி

“மம்தா பானர்ஜி ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி. மேற்கு வங்காளத்தில்  உள்ள கோயில்களை உடைப்பதையும், இந்து கடவுள்களை அவமதிப்பதையும் வேலையாக  செய்து வருகிறார். வங்கதேச நாட்டின் உத்தரவின் பேரிலேயே அவர் இவ்வாறு செயல்படுகிறார். வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி மோசமாக தோற்கடிக்கப்படுவார். அதன் பிறகு அவர் வங்கதேசத்தில் தஞ்சம் அடைய வேண்டியிருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

மேலும், ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’ என்று கூறும் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் கௌரவிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்