மேற்கு வங்க சட்டபேரவையை ஒட்டி, திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்கள் மீண்டும், திரிணாமூல்லில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (மே 22), திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய சோனாலி குஹா, மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
அழிவு நிலையில் கடல்வாழ் பாலூட்டிகள் – இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அறிக்கை
சமூக வலைதளங்களில், அவர் பகிர்ந்து கொண்ட அக்கடிதத்தில், “ஒரு மீன் தண்ணீரிலிருந்து வெளியேறினால், எவ்வாறு வாழ முடியாதோ, அதேபோல் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது திதி. நான் உங்கள் மன்னிப்பை நாடி நிற்கிறேன். நீங்கள் மன்னிக்காது போனால், இவ்வுலகில் நான் வாழாது போவேன்.” என்று இரைந்துள்ளார்.
மேலும், “தயவுசெய்து என்னைக் கட்சியில் இணைய அனுமதிக்கவும். என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பாசத்திற்கு அடிபணிந்து கிடப்பேன்.” என்றும் சோனாலி குஹா உறுதியளித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியால் அதிர்ப்தியடைந்து பாஜகவிற்கு மாறிய சரளா முர்முவும், திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்புவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 23), தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பாஜகவில் இணைந்தது என் தவறுதான். அதற்கு மம்தா திதி என்னை மன்னிக்க வேண்டும். அவர் என்னை ஏற்றுக்கொண்டால், நான் கட்சிக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவேன்.” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.