Aran Sei

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை

Image Credits: India Today

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிராகவும், தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. வங்கியில் சேமிக்க மக்களிடம் பணம் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொமோட்டோ, ஸ்விகி செயலிகள் நடுநிலையாக செயல்படுகிறதா? – விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் முடிவு

மக்களின் இந்த நிலைமைக்கு பாஜக தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, உத்திரபிரதேச தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மக்களுக்கு பாஜக அளிக்கும் பரிசு என்று தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்ட வேண்டும்என்று அவர் கோரியுள்ளார்.

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறிய அவர், நான் இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், இங்கே திட்டமிடல் இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார்.

Source: The Hindu

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் பொய்களை அம்பலப்படுத்துகிறார் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ்

விரிவாக காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்