Aran Sei

மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி – தலைவர்கள் வாழ்த்து

credits : the hindu

மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வெற்றிப்பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 52,832 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். ஆயினும், அவர் முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து, அவர் 6 மாதத்திற்குள் சட்டபேரவை உறுப்பினராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.

‘மோடியால் இந்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது’ – மம்தா பானர்ஜி கண்டனம்

அதைத்தொடர்ந்து, பவானிபூர் தொகுதியில் வெற்றிப்பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் ராஜினாமா செய்ததையடுத்து, அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இதில் வென்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், தற்போது அத்தொகுதில் வெற்றிப்பெற்று முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இவ்வெற்றி தொடர்பாக பேசியுள்ள மம்தா பானர்ஜி,  “பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றபெற வைத்த மக்களுக்கும், நான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி. நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி. பவானிப்பூர் மட்டுமின்றி சம்சர்கன்ஞ் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘மோடிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 2024 நாடாளுமன்ற தேர்தலில், நாட்டை மாநில கட்சிகள் வழிநடத்தும்’ – மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தைப் பகிர்ந்துள்ள அவர், “பவானிபூர் இடைத்தேர்தலில் நீங்க பெற்ற அபார வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்