Aran Sei

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

னைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து என்ற பிரதமரின் நேற்றைய அறிவிப்பு காலத்தாமதமான முடிவு என்றும் அதனால் பல உயிர்களை இழந்துள்ளோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “பிப்ரவரி 21 ஆன்றும், அதற்குப் பின்னரும் பல முறை, அனைவருக்கும் இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்ற எங்கள் நீண்டகால கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதங்களை எழுதினேன்.” என்று நினைவூட்டியுள்ளார்.

“நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதுவும் அதிக அழுத்தம் கொடுத்தப்பட்ட பிறகு, அவர் இறுதியாக எங்கள் பேச்சிற்கு செவிக்கொடுத்து, எங்கள் கோரிக்கையை அமல்படுத்தியுள்ளார். இந்த கொரோனா தொற்று நோயின் காலக்கட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

“கெடுவாய்ப்பாக, பிரதமரின் இந்த தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துள்ளோம். இப்போது அறிவிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து திட்டமானது, அரசியல் பரப்புரைக்காக அல்லாது,  மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்