Aran Sei

‘தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கிவிடுகின்றன’ – மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், விசாரணை அமைப்புகள் நடனமாடத் தொடங்கிவிட்டன என்றும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இதன் பின்னால் உள்ளனர் என்றும் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 8), மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரையில் மம்தா பானர்ஜி கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது பேசியவர், “அவர்கள் அரசின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி காங்கிரஸுக்கு குறி வைத்தார்கள். பின்னர், முலாயம் சிங்கிற்கும், ஷரத் பவாரையும் தங்கள் பொறியில் சிக்க வைத்தார்கள். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இதன் பின்னால் உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், விசாரணை அமைப்புகள் நடனமாடத் தொடங்கிவிட்டன. அபிஷேக் பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பார்த்தா சாட்டர்ஜிக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பினார்கள். தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாபி மற்றும் சுப்ரதா முகர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 6 ஆம் தேதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியை அமலாக்கத்துறை விசாரித்தது. சிட் ஃபண்ட் வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. நாரதா வழக்கு தொடர்பாக, பாபி ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி ஆகிய அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

“அபிஷேக் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இப்போது அவர்கள் அவரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஏன் இப்போது டெல்லிக்கு மாற்றப்பட்டது?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவரான சவேந்து அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய மம்தா பானர்ஜி, “நாரதா வழக்கில் உண்மையில் பணத்தை கையாடல் செய்த நபருக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. ஏன்? அவரை ஏன் மேற்கு வங்க காவல்துறையால் விசாரிக்க முடியாது? அவர் என்ன கடவுளின் புதல்வரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: NDTV

தொடர்புடைய பதிவுகள்:

‘மோடியால் இந்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது’ – மம்தா பானர்ஜி கண்டனம்

’மக்கள் விரோத’ மின்சார மசோதா தாக்கல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

‘மோடிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 2024 நாடாளுமன்ற தேர்தலில், நாட்டை மாநில கட்சிகள் வழிநடத்தும்’ – மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்