Aran Sei

ஒரு நாடு, ஒரு தலைவர் வேண்டாம்; இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்: மம்தா பானர்ஜி

ந்தியாவில் நான்கு தேசிய தலைநகரங்கள் வேண்டும் என்றும் ஒரே ஒரு தலைவர், ஒரே நாடு என்ற கொள்கை நமக்கு சரி வராது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 23) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 124 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றுள்ளது. அதில், திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “ஏன் நம் நாட்டிற்கு ஒரு தலைநகரம் மட்டும் தான் இருக்க வேண்டுமா? வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு ஒன்றென இந்தியாவில் நான்கு தேசிய தலைநகரங்கள் ஏன் இருக்க கூடாது? இந்த நான்கு தேசிய தலைநகரங்களும் ஏன் சுழற்சி முறையில் செயல்பட முடியாது? ” என்று கேள்வி எழுப்பியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை விட பாஜக மிகவும் ஆபத்தானது: மம்தா பானர்ஜி

மேலும், “நாட்டில் உள்ள எல்லாமும் ஏன் டெல்லிக்கு மட்டும் கட்டுப்படும்படியாக இருக்கிறது? நாடாளுமன்றத்தில் நான்கு தேசிய தலைநகர கோரிக்கைகளை எழுப்புமாறு என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூற விரும்புகிறேன். முதலில் நம் சிந்தனையை மாற்ற வேண்டும். ஒரே ஒரு தலைவர், ஒரே நாடு என்பது நமக்கு சரிபட்டு வராது. நேதாஜியின் 124 வது பிறந்த நாளை கொண்டாடும் போது மத்திய அரசு, ‘பரகரம்’(தைரியம்) என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறது என்பது எனக்கு புரியவில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேதாஜி துறைமுகம் என்ற பெயரை ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி, “அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) நேதாஜி மேல் அவ்வளவு அக்கறை இருந்தால், ஏன் நேதாஜி துறைமுகத்தின் பெயரை ஷியாமா பிரசாத் முகர்ஜி என்று மாற்றியுள்ளனர்?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

‘இஸ்லாமிய பயங்கரவாதியான மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் தஞ்சம் புக வேண்டிவரும்’ – பாஜக

மேலும், “சுதந்திரத்திற்கு முன்னரே, திட்டக் கமிஷனையும் இந்திய தேசிய இராணுவத்தையும் உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வை நேதாஜியிடம் இருந்தது. நாங்கள் நேதாஜியை  கொண்டாடுகிறவர்கள் என்று பாஜக கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் திட்டக் கமிஷனை கலைக்கிறார்கள்.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்