Aran Sei

பிரதமரை சந்திக்கும் போது திரிபுரா வன்முறை குறித்து பேசுவேன் – மம்தா பானர்ஜி

credits : the hindu

னது டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரிபுராவில் அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவேன் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் பாஜக ஈடுபாட்டு வருவதாக குற்றஞ்சாட்டி, நேற்று முன்தினம்(நவம்பர் 20), இரவு, பாஜகவைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கலந்துக்கொண்ட கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சயோனி கோஷ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் கூட்டத்திற்கு இடையூறு செய்ததாக கூறப்பட்டதோடு, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், சயோனி கோஷை திரிபுரா காவல்துறை கைது செய்தது.

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

கைதுக்குப் பின் சயோனி கோஷ் கொண்டு வரப்பட்ட கிழக்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திரிபுரா வன்முறைளை கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தொடரும் திரிபுரா வன்முறை சம்பவங்களை டெல்லிக்கு எடுத்துச் செல்ல  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. ஆனால், சந்திப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

இந்நிலையில், இன்று(நவம்பர் 22), பிற்பகல், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லி புறப்படுகையில் செய்தியாளர்களைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசியுள்ளார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் முன்பு நடத்தும் தர்ணா போராட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அவர்களுடன் நிச்சயம் நான் துணை நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய உள்துறை அமைச்சர் இன்னும் உரிய மரியாதையை கொடுக்கவில்லை. போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க வேண்டும். எனது டெல்லி பயணத்தின் போது, ​​நான் பிரதமரைச் சந்திப்பேன். எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரித்தது போன்றவற்றோடு, மேற்கு வங்க மாநிலம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். அத்தோடு, திரிபுரா வன்முறை தொடர்பான பிரச்சினைகளையும் பிரதமரிடம் எழுப்புவேன்” என்று கூறியுள்ளார்.

திரிபுரா வன்முறை குறித்து ட்வீட் செய்த பெண் பத்திரிகையாளர்கள் கைது: பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம்

“தேசிய மனித உரிமைகள் ஆணையம் திரிபுரா மாநிலத்தில் நடந்து வரும் மிருகத்தனமான வன்முறையை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப்பும் அவரது அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுகிறது. அவர்கள் சாமானிய மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். சட்டத்தின்படி திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதித்துறையிடம் வலியுறுத்துவேன்” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்