Aran Sei

காங்கிரஸை தவிர்த்து புதிய அணியை அமைக்கிறாரா மம்தா பானர்ஜி? – களைகட்டும் அரசியல் ஆட்டம்

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்ற யோசனையை தீவிரமாக முன்வைத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயலிழந்துள்ளதால், மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று(நவம்பர் 1), மகாராஷ்ட்ரா மாநில தலைநகர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்த பின் செய்தியாளர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். “இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை. அக்கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது பாஜகவை எதிர்க்கும், மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக போராட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

‘தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ’ – பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, “வெளிநாட்டில் தங்கியபடி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. ஒருவர் அதிக நேரம் வெளிநாட்டிலேயே தங்க விரும்பினால், பின் அரசியலில் எப்படி அவரால் செயலாற்ற முடியும்? நீங்கள் களத்தில் இல்லை என்றால், பாஜக உங்களை தோற்கடிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு தனது ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில், மகாராஷ்டிராவில் பாஜகாவிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த மம்தா பானர்ஜியை சந்திக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்ட்ர மாநில அமைச்சர்களை சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத வரை போராட்டம் தொடரும் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை யார் வழிநடத்துவது என்பது தேர்தலுக்குப் பிறகான சூழலில், ஒருமித்த கருத்து வழியாக தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுடன் மம்தா பானர்ஜி கூட்டம் நடத்தியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்