Aran Sei

‘தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதியென்று மாற்றுங்கள்’: தேர்தல் ஆணையத்தை பகடி செய்த மம்தா பானர்ஜி

தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதி என்று தேர்தல் ஆணையம் பெயர் மாற்ற வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பகடி செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டபேரவைக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 29 ஆம் தேதிவரை, எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று (ஏப்ரல் 10) 44 சட்டபேரவை தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

தினமும் இந்து/இஸ்லாமியர் எனும் விவாதத்தை வளர்க்கும் மோடி: நோட்டீஸ் அனுப்புமா தேர்தல் ஆணையம்? – மம்தா கேள்வி

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) கூச் பெஹர் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாக்குபதிவின்போது, வாக்குசாவடிக்கு வெளியே மத்திய ஆயுத காவல் படையான சிஐஎஸ்ஃப் காவலர்களின் துப்பாக்கியை அப்பகுதி மக்கள் பறிக்க முயன்றதால் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, கூச் பெஹர் மாவட்டத்திற்கு எந்தக் கட்சியையும் சேர்ந்த தலைவர்களும் நுழைவதற்கு 72 மணி நேரம் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய படையின் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : ‘உங்களின் ஒரு வாக்கு ஒரு தோட்டாவிற்கான பதிலடி’ – மம்தா

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 11), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “தேர்தல் நடத்தை விதியை மோடி நடத்தை விதி என்று தேர்தல் ஆணையம் பெயர் மாற்ற வேண்டும். பிஜேபி தன்னுடைய எல்லா சக்திகளையும் உபயோகித்தாலும், என் மக்களுடன் நான் இருப்பதையும் அவர்களின் வலிகளில் பங்கெடுத்துக் கொள்வதையும் உலகில் உள்ள எவற்றாலும் தடுக்க முடியாது.” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

முன்று நாட்களுக்கு, கூச் பெஹாரில் உள்ள என்னுடைய சகோதர சகோதரிகளைச் சந்திப்பதற்கு அவர்கள் தடைசெய்யலாம். ஆனால், நான் நான்காவது நாளில் அங்கிருப்பேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்