Aran Sei

‘2024 தேர்தலில் பாஜகவை ஒன்று சேர்ந்து தோற்கடிப்போம்’- மாநிலக் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

2024 இல் பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று(பிப்பிரவரி 2), திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் பேசியுள்ள மம்தா பானர்ஜி, “வரும் 2024ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாஜகவை நாம் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுங்கள் – மம்தா, ஒபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

“நம்முடைய குறிக்கோள் பாஜகவைத் தோற்கடிப்பதுதான். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க முடிந்த நம்மால், ஒன்றியத்தில் பாஜகவையும் தோற்கடிக்க முடியும். பாஜகவை எதிர்பவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். ஆனால், தங்களின் ஈகோவின் காரணமாக யாராவது இதில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்பினால், நம்மீதே நாம் குறைப்பட்டுகொள்ள தேவை இல்லை. தேவைப்பட்டால், பாஜகவை எதிர்த்து நாம் தனியாக போராட வேண்டி வரலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டில் வைரத்திற்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, இந்திய மக்கள் உணவையும் வேலை வாய்ப்புகளையும்தான் கேட்கிறார்கள் என்றும் மாறாக வைரங்களை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(பிப்பிரவரி 2), அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்