Aran Sei

‘மோடியின் தாடி வளர்கிறதே தவிர நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை’ – மம்தா பானர்ஜி கிண்டல்

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு பதிலாக, பிரதமர் தன் தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.

நேற்று (மார்ச் 26) மேற்குவங்க மாநிலம் பாசிம் மெதானப்பூர் மாவட்டத்தில் உள்ள தாஸ்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், “ஏப்ரல் 1ஆம் தேதி வாக்குபதிவு முடியும் வரை நான் நந்திகிராமில்தான் இருப்பேன். காரணம், பாஜகவினர் வெளிமாநில குண்டர்களைக் கொண்டு வாக்குகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதனால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

‘பாஜகவை வங்கத்தில் இருந்து துரத்த என் ஒரு கால் போதும்’ – சக்கர நாற்காலியில் பரப்புரை செய்த மம்தா பானர்ஜி

“இந்தியப் பொருளாதாரம் மோசமான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. தொழில்துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை. பிரதமர் மோடியின் தாடியில் வளர்ச்சி இருக்கிறதே தவிர பொருளாதாரத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு பதிலாக, பிரதமர் தன் தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ரவிந்தீரநாத் தாகூர் போலவும், சில நேரங்களில் மகாத்மா காந்தி போலவும் உடை அணிகிறார்.” என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

 

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

“சில நேரங்களில் தன்னை தானே சுவாமி விவேகானந்தர் என்று கூறிக்கொள்கிறார். மைதானங்களுக்குத் தனது பெயரையே வைத்துக்கொள்கிறார். அவர்களின் தலையில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. ஒரு ஸ்க்ரு கழன்று விட்டதாக தெரிகிறது.” என்று திரிணாமூல்  காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

 

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்