Aran Sei

‘பிரதமரே, மன் கி பாத்தை அல்ல கோவிட் கி பாத்தை கேட்கவே மக்கள் விரும்புகிறார்கள்’ – மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை பார்க்க மக்கள் ஆர்வமாக இல்லை, தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் இப்பெருந்தொற்று நேரத்தில் கோவிட் கி பாத் நிகழ்ச்சியை கேட்கவே மக்கள் விரும்புகின்றனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 25), முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, “உங்கள் (பிரதமர் மோடி) ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மக்கள் இப்போது ‘கோவிட் கி பாத்’-ஐ கேட்கவே விரும்புகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

“உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இரண்டு லட்சம் மத்திய ஆயுதப்படை காவலர்கள் பணியாற்ற வந்திருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கொரோனா சோதனைகள் எதுவும் செய்யவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பாஜக உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்காக மேற்கு வங்கத்திற்கு வந்தார்கள். அவர்கள் விருந்தினர் மாளிகைகளிலும், விடுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். இங்கு கொரோனா பரவுவதற்கு அவர்களும் ஒரு காரணம்.” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்