Aran Sei

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

ராம ராஜ்ஜியத்தை நிறுவுவதாக பாஜகவினர் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், படுகொலை ராஜ்ஜியம்தான் நடந்துக்கொண்டிருக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

நேற்று முன் தினம் (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

‘லக்கிம்பூர் கெரி வன்முறை’ – ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை கைது செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நேற்று (அக்டோபர் 4), தனது சட்டமன்றத் தொகுதியான பபானிபூரில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, “நாட்டில் நடப்பது ஜனநாயகம் அல்ல, எதேச்சியதிகாரம். விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்த உண்மை வெளிவருவதை அவர்கள் (பாஜக) விரும்பவில்லை. அதனால்தான், அவர்கள் லக்கிம்பூரில் 144 தடை (ஊரடங்கு) உத்தரவை விதித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வரவிருக்கும் நாட்களில் அவர்கள்மீது 144 தடை உத்தரவை மக்கள் விதிப்பார்கள். வன்முறை குறித்து பேசுவதற்கு உள்ளூர் மக்களை சந்திக்க செல்பவர்களைக் கூட தடுக்கிறார்கள்” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

லக்கிம்பூர் கெரி வன்முறை: ’பாஜகவின் ஆதிக்க கொடுஞ்செயலுக்கான அப்பட்டமான சாட்சி’ – ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

உத்தரபிரதேசத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் கோருகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ​​“அவர்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், உத்தரபிரதேசத்தில் படுகொலை ராஜ்ஜியம்தான் நடந்துக்கொண்டிருக்கிறது” என்று மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்