Aran Sei

மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதிமொழி

credits : the indian express

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்கள் அதிகம் நடப்பதற்கான முக்கிய காரணம், திரிணாமூல் காங்கிரசின் ”ஊடுருவக்காரர்களுக்கு ஆதரவான அரசியலும்”, ”வாக்கு வங்கி அரசியலும்” தான் என பிரதமர் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே பலத்த மோதல் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மேற்குவங்கத்தில், பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜங்கல்மகால் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர், ”திரிணாமூல் காங்கிரஸ் தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையோ, ஆதிவாசிகளையோ கண்டுகொள்ளவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார். ”மக்களிடம் மிரட்டி பணம் வாங்கும் திரிணாமூல் காங்கிரசின் கலாச்சாரத்தால் அதிகம் பாதிப்படைந்துள்ளவர்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் ஆதிவாசிகள் தான்”  எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

மேற்கு வங்கத்தில் “பாஜகவிற்கு வாக்கு இல்லை” எனும் சுவரொட்டிகள் எழுதிய மக்கள்: திருத்தி எழுதும் பாஜகவினர்

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்கள் அதிகம் நடப்பதற்கான முக்கிய காரணம், திரிணாமூல் காங்கிரசின் ”ஊடுருவக்காரர்களுக்கு ஆதரவான அரசியலும்”, ”வாக்கு வங்கி அரசியலும்” தான் என பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

மேலும், “வங்க மக்கள் சிறந்த ஞாபக சக்தியை கொண்டவர்கள். புல்வாமா தாக்குதலின் போதும், பாட்லா ஹவுசில் நடந்த என்கவுண்டரின் போதும் நீங்கள் யாருடைய பக்கத்தில் நின்றீர்கள் என்பதை மேற்கு வங்கம் நினைவில் கொண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

”மேற்கு வங்கத்தில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் புதிய வகையான மாவோயீஸ்டுகளை, திரிணாமூல் காங்கிரஸ் உருவாக்குகிறது. இந்தப் பணம் ஏழைகளின் பணம். மாவோயீஸ்டுகளின் வன்முறையை மம்தா அரசு புனிதப்படுத்துகிறது” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் – ” நஷ்ட ஈடு வேண்டும் “

மேலும், மே 2 ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்படும், அப்போது, மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, மேற்கு வங்கத்தில் முன்னேற்றம் தொடங்கப்படும் எனவும் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்