”ஒரு சேலையணிந்த பெண், அடிக்கடி தன் காலை காட்டிக் கொண்டிருக்கிறார். இது தான் வங்க கலாச்சாரத்தின் பிரதிபலிப்பா?” என்று மம்தா பானர்ஜி பற்றி கூறிய கருத்தை திலிப் கோஷி நியாயப்படுத்தியுள்ளதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று (23-3-21) மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷி, மம்தா பானர்ஜி தன்னுடைய உடைந்த காலை காட்டி வாக்கு கேட்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
”மக்களுக்கு அவரின் (மம்தா பானர்ஜி) முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை அதனால் தான் அவர் தன்னுடைய உடைந்த காலை காட்டுகிறார். அவர் சேலையை, ஒரு கால் தெரியும்படியும், மற்றொரு கால் மூடியபடியும் அணிந்துள்ளார். இது போன்று சேலை அணியும் யாரையும் நான் பார்த்தது இல்லை. உங்களுடைய காலை காட்ட வேண்டுமென்றால், கால்சட்டைகளை (பெர்முடா ஷார்ட்ஸ்) அணிந்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு சேலையணிந்த பெண், அடிக்கடி தன் காலை காட்டிக் கொண்டிருக்கிறார். இது தான் வங்க கலாச்சாரத்தின் பிரதிபலிப்பா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
@BJP WB Pres asks in public meeting why Mamatadi is wearing a saree, she should be wearing “Bermuda” shorts to display her leg better
And these perverted depraved monkeys think they are going to win Bengal?
— Mahua Moitra (@MahuaMoitra) March 24, 2021
இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, ” மேற்கு வங்க பாஜக தலைவர், ஏன் மம்தா தீதி சேலை அணிந்திருக்கிறார்? அவருடைய காலை நன்றாக காட்ட கால்சட்டை அணிந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.இது போன்ற வக்கிரமான இழிவான சிந்தனையைக் கொண்டுள்ள குரங்குகள் மேற்கு வங்கத்தில் வெற்றிப் பெற போகிறோம் என நினைத்து கொண்டு இருக்கின்றனர்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதிமொழி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திலிப் கோஷி, மம்தா பானர்ஜி பற்றித் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற மறுத்துள்ளார்.”ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் மம்தா, வங்கத்தின் கலாச்சாரத்துடனும் பாரம்பரியத்துடனும் கண்ணியமாக செயல்பட வேண்டும். வங்கப் பெண்ணுக்கு உண்டான மதிப்புகளுடன் இருக்க வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றி தெரிவித்துள்ளார்.
APPALLING! Forget apologising, @DilipGhoshBJP has gone on to defend the insult he meted out to the daughter of Bengal @MamataOfficial. This misogyny will be punished. Be it saree clad women or those wearing ripped jeans, Bengal won't forgive!#NoVoteToBJP pic.twitter.com/qaZlKMgHcF
— All India Trinamool Congress (@AITCofficial) March 25, 2021
இந்தச் சம்பவம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், “ மன்னிப்பு கேட்பதை கூட மறந்துவிடுங்கள். மேற்கு வங்கத்தின் மகளை அவமானப்படுத்தியதை நியாய்ப்படுத்துகிறார். பெண்களை இழிவாக நினைக்கும் இந்த நபர் தண்டிக்கப்படுவார். வங்கம் எதையும் மறக்காது” என்று பதிவிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.