Aran Sei

‘கட்டுப்பட மறுப்பவர்களை நசுக்குகும் ஒன்றிய அரசு; நான் கட்டுப்படாததால் என் மாநில அரசையும் நசுக்குகிறது’ – மம்தா பானர்ஜி

credits : pti

ங்களுக்கு கட்டுப்பட மறுப்பவர்கள் அனைவரையும் நசுக்கும் வேலையையே ஒன்றிய அரசு செய்து வருகிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில், சமூக வலைதள நிறுவனங்கள் தன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை அவ்வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் பேச்சுரிமைக்கு எதிரானது’: கருத்துக் கூறிய ட்விட்டர் – கண்டித்த ஒன்றிய அரசு

இது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வகையிலான செயற்பாடுகளைக் கையாள்வது கவலை அளிக்கிறது. இந்திய சட்ட விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதேநேரம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகளின்படி நாங்கள் இயங்குவதே சரியானதாக இருக்கும். ஆகவே, இந்தப் புதிய விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு, ஒன்றிய அரசுடன் திறந்தமனதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ட்விட்டர் நிறுவனம் தயாராக உள்ளது.” என்று கூறியிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அறிக்கைக்கு ஒன்றிய அரசு  கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

‘ட்விட்டர் நிறுவனம் நிறவெறியுடன் செயல்படுகிறது’ – ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக கங்கணா ரணாவத்

மேலும், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி கெடுவிதித்ததோடு, அதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை ஏற்ற ட்விட்டர் நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (ஜூன் 16) மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “தகவல் தொழிநுட்ப சட்ட நெறிமுறை எண் 7-ஐ பின்பற்றவில்லை என்றால் விதி எண் 79-ன் கீழ் இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் சூழல் உருவாகும். நாட்டின் தண்டனை சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உட்பட நேரிடும்.” என்று எச்சரித்திருந்தார்.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஜூன் 17), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, “நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் (ஒன்றிய அரசால்) ட்விட்டரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், அதை முழுதாக நசுக்க முயல்கிறார்கள். அவர்களுக்குக் கட்டுப்பட மறுக்கும் அனைவரையும் நசுக்கவே முயல்கிறார்கள். ஒன்றிய அரசால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவர்கள் எனது அரசை நசுக்கப் முயல்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக அரசியல் வன்முறைகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள்குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் ஏமாற்று வித்தை. அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மாநிலத்தில் இப்போது அரசியல் வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை.” என்று மேற்குவங்க முதலமைச்சர் கூறியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்