Aran Sei

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம்: இந்த நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் – பாஜக தலைவர்

credits : the print

ம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ”திட்டமிட்ட நாடகமா” என்று சிபிஐ விசாரிக்க வேண்டும், என மேற்கு வங்க பாஜகவின் மாநில தலைவர், திலிப் கோஷ், தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட மம்தா, தற்போது எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

அவருடைய இடது கால், இடுப்பு, தோல்பட்டை, கழுத்து ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தத் தாக்குதல், தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி கலந்துக் கொள்ள கூடாது என்பதால் பாஜகவால் நடத்தப்பட்ட சதி என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

“மம்தா பானர்ஜி, தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதை பலர் விரும்பவில்லை. அவரைத் தங்கள் பாதையில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். பாஜக தங்களைப் நினைத்து வெட்கப்பட வேண்டும், அவர்கள் ஒரு பெண்ணைத் தாக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறார்கள்” என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சவுகாதா ராய் தெரிவித்திருந்தார்.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க பாஜகவின் மாநில தலைவர், திலிப் கோஷ், இந்தச் சம்பவம் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். இசட் பிளஸ் (Z Plus) பாதுகாப்பைக் கொண்டுள்ள நபர் எவ்வாறு தாக்கப்படுவார். உண்மைகளை வெளிக் கொண்டு வர அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

”இது உண்மையாகவே நடந்த சம்பவமா அல்லது நன்றாக திட்டமிடப்பட்ட நாடகமா என்று விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ள கோஷ், ”இது போன்ற நாடகங்கள் மேற்கு வங்க மக்களுக்குப் புதிதல்ல, ஏற்கனவே பார்த்துள்ளனர். அதிகாரத்திலிருந்து தூக்கிய் எறியப்படப் போகிறோம் என்பதை உணர்ந்துவிட்டவர்கள், வாக்குகளைப் பெறுவதற்கு எவ்வளவு கீழான காரியத்தையும் செய்வார்கள்’ என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்