Aran Sei

திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை

நிலக்கரி கடத்தல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜியின் வீட்டில் சிபிஐ இன்று (பிப்பிரவரி 23) விசாரணை நடத்தவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அபிஷேக் பானர்ஜியின் மகளுடன், மம்தா சில நிமிடங்கள் பேசியதாகவும், அதைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியை விசாரிக்க, வீட்டிற்கு வந்துள்ளனர் என்றும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

நேற்று (பிப்பிரவரி 22), ருஜிரா பானர்ஜி சிபிஐக்கு எழுதிய கடிதத்தில், “என்னை விசாரணை செய்வதற்கான காரணம் அல்லது அதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், நாளை (பிப்பிரவரி 23) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் (சிபிஐ) என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னை விசாரிக்கலாம்.” என்று தெரிவித்திருந்தார்.

மாநில அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு: ‘கட்சி மாற வற்புறுத்தி தாக்குதல்’ – மம்தா குற்றஞ்சாட்டு

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பாஜக என்னை குறிவைத்து செயல்படுகிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்