Aran Sei

‘ஒன்றிய அரசின் Great Indian கொள்ளை’ – சமையல் எரிவாயு சிலிண்டர் விலையுயர்வை விமர்சித்த மம்தா பானர்ஜி

ல்பிஜி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து எரிபொருள்களின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வேதனைப்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதன் வழியாக ஒன்றிய அரசு  ‘பெரும் இந்தியக் கொள்ளையை’ (Great Indian Loot) நடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  ரூ.1000-த்தை நெருங்கியுள்ளது சிலிண்டர் விலை. டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.999.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு  சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – ரூ.1000 த்தை நெருங்கியது சிலிண்டர் விலை

மே 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.102.50 அதிகரித்து ரூ.2355.50 ஆக இருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “இந்திய மக்களை துன்புறுத்துவதை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் எரிபொருட்களின் விலை, எல்பிஜி சிலிண்டரின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் வழியாக, பாஜக அரசானது உண்மையில் ஒரு பெரும் இந்தியக் கொள்ளையை (GreatIndianLoot) நடத்துகிறது. மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று (மே 7) ரூ.50 உயர்த்தப்பட்டது. தற்போது, கொல்கத்தாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1026. உள்ளூர் வரிகளைப் பொறுத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாறுபடும்.

Source: PTI

One Year Of DMK சாதனையா? சறுக்கலா? Ve Mathimaran Interview

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்