Aran Sei

திரிபுராவில் நடைபெற்ற பேரணியில் வன்முறை – அரசியல் எதிரிகளை வன்முறையால் அடக்குவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

திரிபுரா மாநிலத்தில் பேரணிகளை நடத்த துணியும் அரசியல் எதிரிகள்மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் இதில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்றும் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் 23 அன்று, திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் திரிபுரா பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் மீது தாக்குதல் நடத்தியதை மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

நேற்று(அக்டோபர் 24), மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்டு பேசியுள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, மேற்கு வங்கத்தில் அமைதி இருக்கிறது என்றும் அது கல்லறையின் அமைதி அல்ல என்றும் கூறியுள்ளார்.

“உங்கள் மாநிலத்தில் (திரிபுரா) நடக்கும் நிகழ்வுகளைப் பாருங்கள். யார் பாஜகவை எதிர்த்துப் பேரணிகளை நடத்தத் துணிகிறார்களோ அவர்களை கட்டைகளால் தாக்குகிறார்கள். அவர்கள் காயமடைந்த திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்கவில்லை. திரிணாமூலைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, கொல்கத்தாவிற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்