Aran Sei

‘நாம் என்ன சாப்பிட வேண்டுமென்று ஆணையிடும் சர்வாதிகார பாஜகவை வங்கத்தில் நுழையவிடாதீர்’ – மம்தா எச்சரிக்கை

நாம் என்ன சாப்பிட வேண்டும், எப்படி உடையணிய வேண்டும், நாம் என்ன நினைக்க வேண்டும் என்று ஆணையிடும் ஒரு சர்வாதிகார ஆட்சியை நம்மீது திணிக்க விரும்பும், பாஜகவினரை வங்கத்தில் நுழையவிடாதீர்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 7), மேற்கு வங்க மாநில தலைநகர் கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ள மம்தா பானர்ஜி, “அவர்கள் (பாஜக) பெரும் வரலாற்றைக் கொண்ட ரயில்  நிலையங்களுக்கு மறுபெயரிட்டுள்ளனர். ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் உங்களின் பெயரையும் என் பெயரையும் மாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவர்களின் கொள்கைக்களுக்கு ஏற்ப, வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக துர்கா பூஜை கொண்டாடும் வங்க பண்பாட்டை அழிக்கும் பாஜக’ – மம்தா குற்றச்சாட்டு

பிப்ரவரி 24 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு, நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என்று மறுபெயரிடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஹிட்லர், முசோலினி மற்றும் டொனால்ட் டிரம்ப் போன்ற சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ள மம்தா, “நாம் என்ன சாப்பிட வேண்டும், எப்படி உடையணிய வேண்டும், நாம் என்ன நினைக்க வேண்டும் என்று ஆணையிடும் ஒரு சர்வாதிகார ஆட்சியை நம்மீது திணிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களை வங்கத்தில் நுழையவிடாதீர்கள்.” என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  எச்சரித்துள்ளார்.

 Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்