Aran Sei

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என முழங்கும் பாஜக ஏன் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவில்லை? – மம்தா பானர்ஜி கேள்வி

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வெவ்வேறு விலைகளில் வழங்கும் மத்திய அரசின் ஏற்றத்தாழ்வான முடிவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “பாஜக அரசு ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என எல்லா நேரமும் முழங்குகிறது. ஆனால், மக்களைக் காக்கும் கொரோனா தடுப்பூசிக்கு மட்டும் ஒரே விலை கிடையாது. எல்லா இந்தியர்களுக்கு வயது, சாதி, இடம் ஆகியவற்றை தாண்டி இலவச தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இந்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கு ஒரே விலை நிர்ணயிக்கபட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

நேற்றைய தினம், கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும், சீரம் இந்தியா நிறுவனம் அத்தடுப்பூசியின் விலையை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தரும் நிலையில், மாநில அரசுக்கு ரூ 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600 என்று இருமடங்காக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்