Aran Sei

‘தேர்தல் ஆணையம் உதவவில்லை என்றால், பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்காது’ – மம்தா பானர்ஜி

பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் நேரடியாக உதவி செய்யாமல் இருந்திருந்தால், அவர்கள் 30 இடங்களில் கூட வென்றிருக்க மாட்டார்கள் என்றும், உடனடியாக தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களை செய்யாவிட்டால், நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

இன்று (மே 9),  மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் நேரடியாக உதவி செய்யாமல் இருந்திருந்தால், அவர்கள் 30 இடங்களை கூட வென்றிருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக கூறுவேன். இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடனே சில இடங்களில் வாக்குப்பதிவில் மோசடி நடந்தது. உடனடியாக தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

வாக்கு எண்ணிக்கைக்கு பிந்தைய வன்முறையில், பல பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக போலி செய்திகளை பரப்புவதை பாஜக தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி, இந்த வன்முறை தொடர்பாக பகிரப்படும் 99 சதவீத காணொளிகள் போலியானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஆறு மாதங்களாக, பாஜக எதுவும் செய்யவில்லை. அதனால், இப்போது நாட்டை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளனர். அவர்களுக்கு மேற்கு வங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு இலக்கு மட்டும்தான் இருந்தது. இப்போது அவர்களால் மக்களின் தீர்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அவர்கள் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர். போலியான காணொளிகளை பகிர்கிறார்கள்” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘தேர்தல் பரப்புரையில் மேற்கு வங்க விவசாயிகளுக்கு வழங்குவதாகச் சொன்ன ரூ.18,000 எங்கே’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

கடந்த ஆறு மாதங்களாக, ஒன்றிய அரசு எந்த வேலையும் செய்யவில்லை என்றும், ஆனால், மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்காக தினமும் இங்கே வந்துக்கொண்டிருந்தார்கள் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில், 292 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டபேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 213 இடங்களை கைபற்றிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பாஜக 77 இடங்களை வென்றது.

Source: Indian Express 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்