Aran Sei

நாடாளுமன்ற மைய மண்டபத்திற்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்குத் தடை – மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபம் மற்றும் நூலக கட்டத்திற்கு செல்ல ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில், “தற்போதைய அரசியல் நடவடிக்கைகளின் நரம்பு மண்டலமாக நாடாளுமன்றம் மாறியிருக்கிறது. ஊடகங்கள்தான் இங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. அந்நடவடிக்கைகளை பதிவு செய்ய விடாமல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸை தவிர்த்து புதிய அணியை அமைக்கிறாரா மம்தா பானர்ஜி? – களைகட்டும் அரசியல் ஆட்டம்

ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கும் பொறுப்பை ஊடகங்கள் ஏற்றுள்ளன. மைய மண்டபம், நூலக கட்டம் உட்பட நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள பகுதிகளுக்கு செல்ல ஊடகங்களுக்கு தடை விதிப்பது  ஏற்கத்தக்கது அல்ல” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ’ – பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

நாடாளுமன்றத்திற்குள் ஊடகவியலாளர்கள் தடையின்றி நுழைய அனுமதிப்பது தொடர்பாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவூட்டி, நாடாளுமன்றத்தின் செய்திகளை சேகரிகரிக்கும் பத்திரிகையாளர்கள் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒன்றிய அரசின் இம்முடிவுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் குழு இன்று(டிசம்பர் 2), ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

Source: New Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்