Aran Sei

‘கொரோனா பேரிடரில் ஒருங்கிணைந்து, கூட்டாக ஆலோசித்து இயங்குங்கள்’ – பிரதமருக்கு காங்கிரஸின் ஆறு ஆலோசனைகள்

கொரோனா பேரிடர் காலத்தில் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டாக ஆலோசித்து இயங்கும் அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்கள், பாதுகாப்பு உடையான பிபிஇ, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி போன்றவற்றின் மீதான ஒன்றிய அரசின் வரிகளை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (மே 10), பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தேவையான மருத்துவமனை படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் மருந்துகள், வெண்டிலேட்டர்கள் போன்றவை போதிய அளவு இல்லாமல் மாநில அரசுகள் செய்வதறியாது நிற்கின்றன. கொரோனா தொற்று சிகிச்சைக்காக மக்கள் தங்களுடைய சொத்துக்களான நிலங்களையும் நகைகளையும் விற்றும், இவை போதாமல் சேமிப்பு பணத்தை செலவழித்தும் வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

“இந்த பேரிடம் காலத்தில், ஒன்றிய அரசு தனது கடமையை ஒழுங்காக செய்யவில்லை.  கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராட ஆறு
ஆலோசனைகளை நான் வழங்குகிறேன். இந்த இக்கட்டான காலத்தில் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டாக ஆலோசித்து இயங்கும் அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும்.” என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், “தற்போதைய பேரிடர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு மருந்து திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியை உபயோகித்து, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும். தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்கள், பாதுகாப்பு உடையான பிபிஇ, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி போன்றவற்றின் மீதான ஒன்றிய அரசின் வரிகளை நீக்கவேண்டும் என்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பிரதமரிடம் மல்லிகார்ஜுன கார்கே கோரியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்