Aran Sei

‘மக்கள் சுவாசிக்க சிரமப்படுகையில், தனக்காக அரண்மனை கட்டும் பிரதமரை இந்தியா மறக்காது’ – மல்லிகார்ஜுன கார்கே

credits : the indian express

ம் மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில், பிரதமர் பேரணிகள் நடத்துவதிலும், தனக்காக அரண்மனை கட்டுவதிலும் பரபரப்பாக இருப்பதை இந்தியா மறக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 11), பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய தொடர்ச்சியான டிவீட்டுகளில் , ஸ்ரீ. ஜே.பி.நட்டா, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்து, எல்லாவற்றிற்கும் காங்கிரஸையே குற்றம் சாட்டும் பழக்கத்திலிருந்து நீங்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. இருப்பினும், அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட ரூ .35 கோடியை பாஜக அரசு பயன்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மக்களுக்கு இவற்றை தெரிந்து கொள்வதற்கான உரிமை உள்ளது.” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

“நம் மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில், பிரதமர் பேரணிகள் நடத்துவதிலும், தனக்காக அரண்மனை கட்டுவதிலும் பரபரப்பாக இருப்பதை இந்தியா மறக்காது. காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கடிதங்களை எழுதுவதற்கு பதிலாக, தயவுசெய்து இந்தியாவுக்கு மன்னிப்பு கேட்டு, மக்களுடைய வேண்டுகோளுக்கு செவி கொடுங்கள்.” என்று அவர் தனது டிவீட்டில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மோசமான நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்டுக் கொண்டு வருவதற்கு தேவையான வளங்களை சேமிப்பதற்கு பதிலாக, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது, ஒரே கட்டமாக தேர்தல்களை நடத்த மறுப்பது, சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது போன்றவற்றை பாஜக அரசு செய்து வருகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்