Aran Sei

வரலாற்று சின்னமாகும் மால்கம் எக்ஸின் இல்லம் – அமெரிக்க வரலாற்றுப் பதிவேட்டில் இணைப்பு

மெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மால்கம் எக்ஸின் சிறுவயது இல்லம், வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மால்கம் லிட்டில் என்ற மால்கம் எக்ஸ், தனது இளவயதில், ஆதாவது 1940 களில் தனது சகோதரி எலா லிட்டில் காலின்சுடன் இந்த இல்லத்தில் குடியேறியுள்ளார். லிட்டில் காலின்சின் மகனான ரோட்னெல் காலின்ஸ், “அந்த வீட்டை கருப்பின மக்களின் வரலாற்றையும், சிவில் உரிமைகளையும் படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கான விடுதியாக மாற்றுவதோடு, ஆண்டுக்கு சில நாட்கள் மட்டும் சிறப்பு நிகழ்வுகளுக்கும் பொது மக்களின் பார்வைக்கும் அனுமதிக்கவுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த முடிவை சாத்தியமாக்க உதவும் வகையில், அரசு வரி சலுகைகள் அளித்து, அந்நாட்டின் வரலாற்று பொருட்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களில் இதை இணைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

சிவில் உரிமைகள் செயற்பாட்டாளராக இருந்த லிட்டில் காலின்ஸ், அவரது தந்தை இறந்ததும், அவரது சகோதரரின் சட்டப்பூர்வ பாதுகாவலரானார்.

மால்கம் எக்ஸ், மாசசூசெட்ஸில் சிறையில் இருந்தபோது, நேஷன் ஆஃப் இஸ்லாம் என்ற அமைப்பில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, 1950 ஆம் ஆண்டுகளிலும் 1960 ஆம் ஆண்டுகளிலும், நாடு முழுவதும் கோவில்கள் மற்றம் மசூதிகள் கட்டி பிரபலமடைந்து வந்த அந்த அமைப்பின் முதன்மை செய்தித் தொடர்பாளராக பதவியேற்றார்.

தனது ஆப்பிரிக்க முன்னோர்களின் தொடர்பு அறுபட்டதை குறிக்கும் வகையில், தனது பெயருக்குப் பின்னால் ‘எக்ஸ்’ (X) என்ற ஆங்கில எழுத்தை மால்கம் சூட்டிக்கொண்டார்.

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து விலகிய பிறகு, 1965 ஆம் ஆண்டு, தனது 39 வயதில், நியூயார்க் நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது மால்கம் எக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Source: AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்