Aran Sei

வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்குவது கண்டிக்கத்தக்கது – மேகாலயா முன்னாள் முதல்வர்

“மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல்” வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க ஒன்றிய அரசின் முடிவிற்கு மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகாலயா முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சங்மா, ஒன்றிய அரசின் முடிவுக்கு அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பது தன்னைக் குழப்பமடையச் செய்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் இந்தி கருத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் – தேச துரோக வழக்கில் கைது செய்த மணிப்பூர் காவல்துறை

“ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்தபோது அப்பகுதி மக்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. வடகிழக்கு மக்களின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதை மாநில அரசுகள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்,” என்று முகுல் சங்மா  கூறியுள்ளார்.

இந்தி கற்க வேண்டும் என்ற முதலமைச்சர் கான்ராட் கே சங்மாவின் கருத்தைக் முகுல், “இந்தி மொழியைக் கற்க விடாமல் தடுப்பது யார்? ஜெர்மன் அல்லது பிரெஞ்சு மொழி கற்பதற்கு கூட யாரும் தடுப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“மொழியியல் கண்ணோட்டத்தில் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் மதிப்பதும் மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் பள்ளியில் ஹிந்தி பாடங்களைப் படித்தோம்.  ஆனால் அது ஒருபோதும் கட்டாய பாடமாக இருக்கவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

“பல்வேறு மொழிகளின் அறிவுடன் தங்களைச் சித்தப்படுத்துவதற்கு மக்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். ஒருவருக்கு பல மொழிகளைத் தெரிந்திருப்பது எப்போதுமே சாதகமாக இருக்கும், ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்குமாறு அனைவரையும் கட்டாயப்படுத்துவது சரியல்ல” என்று மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா கூறியுள்ளார்.

நாங்கள் எதற்காக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் உங்கள் உளறல்களைக் கேட்கவா? – பிரகாஷ்ராஜ் விளாசல்

இதற்கிடையில், எட்டு மாணவர் அமைப்புகளின் கூட்டமான வடகிழக்கு மாணவர் அமைப்பு (NESO), பிராந்தியத்தில் 10 ஆம் வகுப்புவரை ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கை உள்ளூர் மொழிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டுள்ளது.

source: newindianexpress

அசிங்கப்பட்ட H Raja | நடந்தது என்ன?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்