Aran Sei

பெண் விவசாயிகளின் நாடாளுமன்றம் அவர்களின் ஆளுமையை பிரதிபலிக்கிறது – விவசாயிகள் சங்கம்

Credits : The Hindu

”இந்திய விவசாயத்திலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய போராட்டத்திலும், பெண்கள் வகிக்கும் முக்கியமான பங்கை, பெண் விவசாயிகளின் நாடாளுமன்ற கூட்டம் பிரதிபலிக்கிறது” என சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தப்படி, ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் நாடாளுமன்றமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம், பெண் விவசாயிகளின் நாடாளுமன்றம் கூடுகிறது. ”இந்திய விவசாயத்திலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய போராட்டத்திலும், பெண்கள் வகிக்கும் முக்கியமான பங்கை, பெண் விவசாயிகளின் நாடாளுமன்ற கூட்டம் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்” என சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

‘வேளாண் சட்டங்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவானது’ – விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி

இது தொடர்பாக, மகிளா கிசான் அதிகார் மன்ச் அமைப்பைச் சேர்ந்த கவிதா குருகந்தி பேசுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மிகச் சிறிய அளவிலான பெண்களே சொந்தமாக நிலம் வைத்துள்ளனர். இருப்பினும், 30% பெண்கள் விவசாய உற்பத்தியாளர்களாகவும், 43 % பெண்கள் விவசாய கூலிகளாகவும் இருக்கின்றனர் என கூறியுள்ளார். மேலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தில் 15% முதல் 20% பெண்கள் கலந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணமத்திற்காக பெண்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணையிக்க வேண்டும் – பிரதமருக்கு பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்

தொடர்ந்து பேசிய அவர், ”பெண்களுடைய பங்களிப்பு பிரதனமாக இருந்தாலும், விவசாய போராட்டத்தின் தலைமை பொறுப்பில் குறைந்த அளவிலான பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றும் மகிளா கிசான் அதிகார் மன்ச் அமைப்பைச் சேர்ந்த, கவிதா குருகந்தி தெரிவித்துள்ளார்.

CREDITS : THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்