Aran Sei

மத்திய துறைமுக ஆணைய மசோதா: உங்கள் நண்பரிடம் இந்தியாவின் சொத்தை கொடுக்க போகிறீர்களா? – காங்கிரஸ் கேள்வி

credits : ndlf

ன்றைய தினம் மத்திய அமைச்சர் மன்சுக் மந்தாவியா பெரு துறைமுக ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதா தொடர்பாக நடந்த விவாதத்தின் சிறு பகுதி.

இந்த மசோதா, பெரு துறைமுக துறையில் நடக்கும் வியாபார பரிவர்த்தனைகளில், முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகவும், பொதுத்துறை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறைமுகங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று உள்ள யாரும் இந்த மசோதாவை எதிர்க்கமாட்டார்கள் எனவும் இந்த மசோதா, துறைமுகத்தைத் தனியார் துறைக்கு விற்காது எனவும் கூறியுள்ளார்.

இந்த மசோதா தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சக்திசின் கோஹில்,  “பலவீனமாக இருக்கும் இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட நண்பருக்காக உதவும் திட்டமே உள்ளது. உங்கள் நண்பருக்கு உதவதான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதா? விமான நிலையங்களுக்கு அந்த நண்பரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

மேலும், “இப்போது இருக்கும் 12 துறைமுகங்களையும் அந்த நண்பரிடமே ஒப்படைக்க வேண்டும் எனும் உங்களின் எண்ணம் வெளிப்படையாகத் தெரிகிறது” என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

இந்தத் துறைமுக வியாபாரத்தில், ஒரு குறிப்பிட்ட நண்பரைப் பின் கதவு வழியாக அனுமதிக்கவே இந்த மசோதா திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: 10 லட்சத்திற்கும் அதிகாமானோர் மனு – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம்

மேலும், “வாரியத்தில் உள்ள 13 உறுப்பினர்களில், 7 பேர் தனியார் உறுப்பினர்கள். ஆனால், இன்னும் நீங்கள் தனியார்மயமாகவில்லை என்று கூறுகிறீர்களா? அவர்களின் தகுதி, நிபுணத்துவம், அனுபவம்பற்றி எதுவும் கூறப்படவில்லை. அப்படியென்றால், அவர்களின் தகுதி என்னவாக இருக்கும் ? ”ஆமாம் முதலாளி”, ”ஆமாம் அமைச்சர்களே” என்று கூறுபவர்கள் தான் வாரியத்தில் இடம்பெற முடியும்” என்று சக்திசின் கோஹில் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வாரியத்தில், தொழிலாளர்களுக்குப் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தரப்பில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே குழுவில் ஒதுக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் – ட்ரம்ப் ஆதரவாளர் வீட்டில் ஆயுதம் பறிமுதல்

இந்திய அரசு 12 துறைமுகங்களைத் தேசிய சொத்தாகக் கொண்டுள்ளது, அதைப் பாதுகாப்பது நம்முடைய கடமை, தனியார் துறையை இதில் செயல்பட அனுமதித்தால் சட்டத்தில் இருக்கும் ஒட்டைகள் மூலம் தனியார் துறை இதைக் கைப்பற்றி விடும் என்று எச்சரித்த காங்கிரஸ் உறுப்பினர், மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.

‘போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மோடி’ – தேச துரோக வழக்குப் பதிய காங்கிரஸ் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, திரிணாமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்