Aran Sei

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

credits : indian express

ந்துக்களின் பண்டிகையான நவராத்திரிக்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

நேற்று முன் தினம் (ஏப்ரல் 4), இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பேசிய தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூர்யன், “துர்கா தேவியை வணங்கும் நவராத்திரியின் புனிதமான நாட்களில் நமது மாநகரட்சியின் கீழ் உள்ள இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். மேலும், இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் இறைச்சி, வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தார்.

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

இந்நிலையில், இது குறித்து, மஹுவா மொய்த்ரா இன்று (ஏப்ரல் 6) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “நான் தெற்கு டெல்லியில் வசிக்கிறேன். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிடுவதற்கும், கடைக்காரர் தனது வியாபாரத்தை நடத்துவதற்கும் அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயரும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக, வடக்கு டெல்லி மாநகராட்சியில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்