Aran Sei

ஊடகங்களை விமர்சித்ததற்கு மன்னிப்புக் கேட்க முடியாது – மஹுவா மொய்த்ரா

credits : indian express

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஊடகங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கொல்கத்தா பிரஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொய்த்ரா கலந்துகொண்ட கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை ”2 பைசா ஊடகம் என்றும் கோடி மீடியா” ( பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாகச் செயல்படும் ஊடகங்களைக் கோடி மீடியா எனக் குறிப்பிடுகிறார்கள்) என்றும் கூறிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் மொய்த்ரா கூறிய கருத்துக்கு “சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்களை இவ்வாறுதான் அச்சுறுத்துவார்கள்” என பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

மொய்த்ராவின் கருத்துகுக் கொல்கத்தா பிரஸ் கிளப் கடுமையான கண்டனம் தெரிவித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஒரு ஜனநாயக அமைப்பில், பத்திரிகைகள் முக்கியப் பங்கை ஆற்றுவதால்தான் சமூகத்தில் பத்திரிகைதுறைக்கென்று  மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறது. பத்திரிகையாளர்கள் மோசமான சூழ்நிலைகளிலும் துணிந்து சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படுவதால்தான் உலகளவில் மதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்து மிக மோசமான கருத்தைப் பதிவு செய்ததைத்  திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

credits : the wire
credits : the wire

இந்தச் சம்பவம் குறித்து தி வயரிடம் பேசிய மொய்த்ரா ”திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே நடந்த உட்கட்சி மோதல் குறித்து நான் விசாரித்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்வுக்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், தகவல் அறிந்து ஊடகங்கள் அங்கு வந்துவிட்டன. இதையடுத்து எங்கள் அனுமதியை மீறியும் பலர் உட்கட்சி உறுப்பினர்கள் விவகாரத்தை நாங்கள் விவாத்தித்துக் கொண்டிருப்பதைத் தங்களின் கைபேசியில் பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். இதன் பின்னணியில்தான் கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டில் அதிருப்தியைக் கொண்டிருந்த நான்,  உட்கட்சி விவகாரம் குறித்து என்னிடம் சொல்லாமல் ஏன் 2 பைசா ஊடகங்களை வரவழைத்தீர்கள் எனக் கேள்வியெழுப்பினேன்” எனக் கூறியுள்ளார்.

`இறுதிக்கட்ட பணியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு’ – மத்திய அரசு

தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கும் மொய்ரா ”உட்கட்சி விவகாரத்தில் ஊடகங்களுக்கு வேலையில்லை. அரசியல் லாபத்திற்காக சிலர் செய்யும் சர்ச்சைகளில் பிரஸ் கிளப் அதனுடைய நேரத்தை விரயமாக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”ஊடகங்கள் குறித்து நான் கூறிய உண்மையான துள்ளியமான விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என ஊடகங்களைக் கிண்டல் செய்யும் விதத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“எனக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு நேரத்தை வீணடிப்பதற்கு முன்னர், பிரஸ் கிளப் உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து இருப்பதையும், பணம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும் கோடி ஊடகங்களின் மோசமான நிலையையும் பிரஸ் கிளப் கவனிக்க வேண்டும்” என்று மொய்த்ரா தி வயரிடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்