Aran Sei

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்திற்குள் மரணம் : காரணம் என்ன?

credits : the hindu

உத்தர பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இவருடைய மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மொரதாபாத் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மொராதாபாத் மாவட்டத்தில் மகிபால் சிங் எனும் நபர் அரசு மருத்துவமனையின் வளாக ஊழியராக (Ward Boy) பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமையன்று (16-1-20) கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து, இதய வலி மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மரணமடைந்துள்ளார். தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கே முன்பே அவருக்கு பல உடல்நிலைக் கோளாறு இருந்ததாக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

’முழு ஆய்வு முடியாத கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகிபால் சிங்கின் மகன் விஷால், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பே உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வந்த தனது தந்தை தடுப்பூசியை போட்ட  பின்னர் மிகவும் பாதிப்படைந்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு

மேலும் பேசிய அவர், “தடுப்பூசி மையத்திலிருந்து மதியம் 1.30 மணியளவில் எனது தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவர் கடுமையான இருமலாலும் சுவாசப் பிரச்சனையாலும் அவதிப்பட்டார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சனை இருந்தது. தடுப்பூசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய அவர் மிகவும் மோசமாக இருந்தார்” என்று விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘தடுப்பூசிகள் நமக்கு’சஞ்சிவி மூலிகை’; பிரமதரின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது’ – மத்திய அமைச்சர்

மகிபால் சிங்கின் மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மொராதாபாத்தின் தலைமை மருத்துவ அதிகாரி எம்.சி. கார்க் ”அவருக்கு சனிக்கிழமை நண்பகல் தடுப்பூசி போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவர் மூச்சுத் திணறல் மற்றும் இதய வலி இருப்பதாக புகார் செய்தார். இது தடுப்பூசிக்கு எதிர்வினையாகத் தெரியவில்லை. அவர் சனிக்கிழமை (தடுப்பூசி போட்ட தினம்) இரவு கூட மருத்துவமனையில் பணிபுரிந்தார் அப்போது அவருக்கு எந்தப் பிரச்சனையும் தென்படவில்லை. மரணத்திற்கான காரணங்களை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது “என்று கூறியுள்ளார்.

தடுப்பூசியை முதலில் அரசியல்வாதிகள் போட்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

மகிபால் சுங் நுரையீரல் நோயினால் ஏற்பட்ட இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளதாக அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைகள் கூறியுள்ளன. உத்தர பிரதேச அரசாங்கம் கடந்த சனிக்கிழமையன்று 22,643 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்