Aran Sei

அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்

மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை பெற்ற அவ்வியக்கத்தின் முன்னாள் ஊழியர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

மேற்குவங்க மாநிலம் ஜார் கிரம் மாவட்டம் லால்கர் பகுதியைச் சேர்ந்த மஹதோ காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் குழுவில் செயல்பட்டதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட மஹதோ தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

மாவோயிஸ்ட் இயக்கம் தீவிரமாகச் செயல் படும் ஜங்கல்மஹால் பகுதியில் தற்போது அவர் திரிணமூல் கட்சிக்காக உழைத்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதியில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

“சிறை அல்ல பிணை” என்பது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது – மாவோயிஸ்ட் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து

இதுகுறித்து தெரிவித்துள்ள மஹதோ, ” பாஜக இந்தப் பகுதியில் வெற்றிபெற்ற பிறகு பழங்குடிகளைப் பிரித்தாளும் வேலையைச் செய்து வருகிறது. தனது அரசியல் லாபத்திற்காகச் சந்தால் பழங்குடிகளுக்கும், குர்மி பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டது. ஜங்கல்மஹால் பகுதி பழங்குடி மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்” என்றும் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் திரிணாமுல் குறித்து பேசிய மஹதோ, மமதா பானர்ஜீ காடு, நீர், பழங்குடியினரின் நிலவுடைமை குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் , அவர் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தப் படுத்துவதை தடை செய்வார் எனவும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்