Aran Sei

சபர்மதி ஆசிரமத்தை  மறுசீரமைக்கும் குஜராத் அரசின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த காந்தியின் கொள்ளுப் பேரன்

காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை ரூ. 1,200 கோடி மதிப்பில் மறு சீரமைக்கும் குஜராத் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

துஷார் காந்தி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ஆசிரமம் மறுசீரமைப்பு என்ற பெயரில், அதன் அருகில் 5 ஏக்கரில் இருந்து 55 ஏக்கர் வரை வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் குஜராத் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்’ – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்

சபர்மதி ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து 1917 முதல் 1930 வரை காந்தி அங்கு வாழ்ந்தார். அவரின் விருப்பங்களுக்கு எதிராக குஜராத் அரசின் ஆசிரம மறுசீரமைப்பு திட்டம் அமைந்துள்ளது என துஷார் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர போராட்டத்தின் நினைவுச் சின்னமாக திகழும் ஆசிரமத்தை, வணிக சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு இந்த மறுசீரமைப்பு திட்டம் வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரமத்தை தற்போது அறக்கட்டளை நிர்வகித்து வரும் நிலையில், அதை தனியாருடன் இணைந்து அரசு நிர்வகிக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது என துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

நினைவு சின்னம் மற்றும் வளாகத்தை மேம்படுத்துவதற்காக, மார்ச் 5 ஆம் தேதி குஜராத் அரசின் தொழில் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

தடுப்பூசி வாங்குவதற்கு கடன் கோரிய ஒன்றிய அரசு – 200 கோடி டாலர் கேட்டு விண்ணப்பம்

அரசின் மறுசீரமைப்பு திட்டம், “சுதந்திர போராட்டத்தின் புனித தலம் மற்றும் நினைவுச் சின்னத்திற்கு வரும் தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இதை ஒரு வணிக சுற்றுலா தளமாக மாற்றப்பட்டு பின்னர் தனியாருக்கு அடகு வைக்கப்படும்” என அஞ்சுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரியுள்ள துஷார் காந்தி, “அரசாங்கத்தின் திட்டம் தடுத்து நிறுத்தப்படவோ தடை செய்யப்படவோ இல்லை என்றால், முழு வளாகமும் இடிக்கப்பட்டு வணிக பொழுது போக்கு வளாகமாக மாற்றப்பட்டு விடும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரமத்தின் வளாகத்திற்குள் இருக்கும் எந்த கட்டிடத்தையும் மாற்றவோ மறுகட்டமைப்பு செய்யவோ முடியாது என அரசு கூறி வருகிறது. காந்திய நெறிமுறைகளின்படி அனைத்து பாரம்பரிய கட்டிடங்களும் மீட்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பதிவு – ஆக்ரா, உதைப்பூர் மற்றும் ஜம்முவில் 6 பேர் கைது

சபர்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டம் ஆசிரமத்தை கையகப்படுத்துவதை நோக்கமாக கொண்டது இல்லை மாறாக அதன் பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் குறைந்தபட்ச உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என அரசு கூறியுள்ளது.

Source: the hindu

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்