Aran Sei

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

காத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்ஜீ, விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் டெல்லி காசிப்பூர் எல்லைக்கு வருகை தந்து, போராட்டத்திற்கு தனது ஆதரவை நல்கியுள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 13), போராட்டக்களத்திற்கு வருகை புரிந்து, போராடும் விவசாயிகள் மத்தியில் பேசிய 84 வயதை கடந்த தாரா காந்தி, “உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளின் நலனில்தான், நம் நாட்டின் நலனும் எங்கள் எல்லாருடைய நலனும் அடங்கியிருக்கிறது. அதனால், என்ன ஆனாலும், விவசாயிகள் நலம்பெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

எந்த அரசியல் கட்சியின் சார்பாகவும் நான் இங்கே வரவில்லை என்றும் நம் வாழ்நாள் முழுதும் நமக்கு அண்ணமூட்டும் விவசாயிகளுக்காக இங்கே வந்திருக்கிறேன் என்றும் தாரா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

“விவசாயிகள் அமைதியான வழியில் இப்போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறைக்கொள்ள வேண்டும் என்றும் தாரா காந்தி பேசினார்.” என்று பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.

Source – PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்