Aran Sei

“ஆக்சிஜன் கசிவால் மக்கள் இறந்துகொண்டிருந்ததை கண்முன்னே பார்த்தேன்” – 24 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியம்

காராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவின் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பதை அப்போது அங்கிருந்த விக்கி ஜாதவ் என்ற இளைஞர் நினைவு கூர்ந்துள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டவுடன் அங்குச் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் ஆக்சிஜன் கவசத்தை தங்களையும், தங்களது உறவினர்களின் உயிரையும் காப்பாற்ற எடுத்துக்கொண்ட அந்த மனிதாபிமானமற்ற அந்த நொடியைக் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “ஒரு மணிநேரத்திற்கும் குறைவாக சிலர் இறந்துகொண்டிருப்பதை என் கண்முன்னே பார்தேன். இறந்தவர்களின் ஆக்சிஜன் கவசங்களை அங்கிருந்தவர்கள் தங்களுக்காகவும் , தங்கள் உற்றாருக்காகவும் எடுத்துக்கொண்டனர். நானும் கூட எனது பாட்டியைக் காப்பாற்ற அதையே செய்தேன். ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என்றும் விக்கி ஜாதவ் கூறியுள்ளார்.

விக்கி அவரது பாட்டி சுகந்தா தோரட்டை சரியாக 10 மணியளவில் பார்க்க வந்தபோது, அவரது பாட்டியின் ஆக்சிஜன் அளவு 38 என்ற குறைவான அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் செல்லவில்லை என்று தெரிந்தவுடன் மருத்துவமனை ஊழியர்களை அழைத்துள்ளார்.

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதித்த போதே கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அப்போது பெரும்பான்மையான நோயாளிகளைக் காப்பாற்ற பெரியளவிலான சிலிண்டரை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், அந்தச் சிலிண்டர் அங்கிருந்த நோயாளிகளை காப்பாற்ற போதிய அளவில் இல்லாததால் சுவாசப்பிரச்சனை கொண்ட எண்ணற்ற நோயாளிகள் இறந்தனர் என்றும் விக்கி ஜாதவ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு ரெம்தேசிவிர் மருந்தைத் தரமறுக்கும் மத்திய அரசு குஜராத்துக்கு வழங்கியது ஏன்? – மகாராஷ்டிர அமைச்சர் கேள்வி

இந்நிலையில், ஆட்டோக்களிலும், ரிக்சாகளிலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டி சென்றிருக்கின்றனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்குறித்து பேசிய விக்கி ஜாதவ், நான் மருத்துவர்களையோ, செவிலியர்களையோ குற்றம் சொல்லமாட்டேன். அவர்களால் முடிந்ததை செய்தார்கள், எனது கோவமெல்லாம் நோயாளிகளை பாதுகாக்கத் தவறிய அந்த மருத்துவமனை நிர்வாகதையே’ என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்