Aran Sei

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஜக எம்.பி காவல்துறையால் தாக்கப்பட்டாரா? – மஹாராஷ்ட்ரா காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2008 ஆம் ஆண்டு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், ஏப்ரல் மாதத்திற்குள் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா காவல்துறை தலைமை இயக்குனருக்கு அம்மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்புயிள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

மஹாராஷ்ட்ரா மாநிலம், மாலேகானில் நடைபெற்ற குண்டி வெடிப்பு தொடர்பாக, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையால்(ஏ.டி.எஸ்) கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்தபோது சித்ரவதை செய்யப்பட்டதாக, பிரக்யா சிங் தாக்கூர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், தேசிய மனித உரிமை ஆணையத்தில், ஆதித்ய மிஸ்ரா என்ற வழக்கறிஞர், 2018 ஆம் ஆண்டு, தேசிய மனித உரிமை ஆணையத்தில், புகார் அளித்திருந்ததாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

புகாரின் மீது, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ள, அந்த புகாரை மகாராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றி, தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, மகாராஷ்டிரா காவல்துறை தலைமை இயக்குனரை ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

நேர்காணலில் தாக்கூர் கூறியதன் அடிப்படையில், இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் ஆதித்யா மிஸ்ரா தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாக தி இந்திய எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு, ஆறு பேர் உயிரிழப்பு மற்றும் 100 பேர் படுகாயமடைவதற்கு  காரணமான செப்டம்பர் 29, 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டிவெடிப்பில், பிரக்யா சிங் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பிருப்பதாகவும், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருவதால், அது தான் விசாரணை அமைப்பு எனவும் தெரிவித்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்