கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை நடை பிணங்கள் என்று சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அவர்கள் (எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள்) ஜஹாலத்’ (முட்டாள்தனம்) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜஹாலத் என்பது மரணத்தின் ஒரு வடிவம். இவர்கள் நடைபிணங்களுக்கு ஒப்பானவர்கள் என்று இமாம் அலியின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா: ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, கவுகாத்தியில் உள்ள 40 சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைகள் உயிருடன் இருக்கும் பிணங்கள். அவர்களின் ஆன்மாக்கள் இறந்துவிட்டது என்று சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
அவர்கள் (எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள்) திரும்பி வந்ததும் அவர்களின் உடல்கள் நேரடியாக சட்டசபைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும் . இங்கு கொளுத்தப்பட்ட தீயில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்று என்று சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
source: indiatoday
ஓபிஎசை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி SP Lakshamanan Latest Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.